Mobile

மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ இ7 பவர் ஸ்மார்ட்போன் வெளியீடு!!

மோட்டோரோலா நிறுவனம் தற்போது மோட்டோ இ7 பவர் ஸ்மார்ட்போனை நாளை மறுநாள் அறிமுகம் செய்ய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.  இந்த மோட்டோ இ7 பவர் ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

மோட்டோ இ7 பவர் ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே, 720×1,600 பிக்சல் தீர்மானம் கொண்டதாக உள்ளது.

மெமரி அளவினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி வசதி மற்றும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவினைக் கொண்டுள்ளது.

மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ இ7 பவர் ஸ்மார்ட்போன் வெளியீடு!!

மோட்டோ இ7 பவர் ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 13எம்பி பிரைமரி சென்சார், 2எம்பி செகன்டரி சென்சார் மற்றும் முன்புறத்தில் 5எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு கொண்டுள்ளது.

பிராசஸர் வசதியினைப் பொறுத்தவரை மோட்டோ இ7 பவர் ஸ்மார்ட்போன் ஆனது மீடியாடெக் ஹீலியோ பி22 சிப்செட் வசதியினைக் கொண்டுள்ளது. மேலும் இயங்குதளத்தினைப் பொறுத்தவரை ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும் தன்மை கொண்டுள்ளது.

மோட்டோ இ7 பவர் ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவினைக் கொண்டுள்ளது.

பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை மோட்டோ இ7 பவர் ஸ்மார்ட்போன் கைரேகை சென்சார் வசதி கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை 4ஜி வோல்டிஇ, புளூடூத் 4.2, வைஃபை 802.11 பி / ஜி /என், ஜிபிஎஸ், க்ளோனாஸ், 3.5 மிமீ ஆடியோ ஜாக் கொண்டுள்ளது.

Related posts

அறிமுகமானது ரியல்மி எக்ஸ்3 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

ஒரு வழியாக அறிமுகமானது ஒப்போ எஃப் 17 ப்ரோ ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

மோட்டோரோலா எட்ஜ் 20 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளியீடு!

TechNews Tamil