Mobile

சர்வதேச சந்தையில் மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ இ6ஐ ஸ்மார்ட்போன் வெளியீடு!!

மோட்டோரோலா நிறுவனம் அதன் மோட்டோ இ6ஐ ஸ்மார்ட்போனை சர்வதேச சந்தையில் வெளியிட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

மோட்டோரோலா மோட்டோ இ6ஐ ஸ்மார்ட்போன் 6.1 இன்ச் எச்டி பிளஸ் மேக்ஸ் விஷன் ஐபிஎஸ் டிஸ்பிளே மற்றும் 1560 x 720 பிக்சல்கள் தீர்மானம் கொண்டுள்ளது. இது ஆக்டோ-கோர் UNISOC Tiger SC9863A பிராசஸர் வசதியைக் கொண்டுள்ளது.

இயங்குதளத்தினைப் பொறுத்தவரை ஆண்ட்ராய்டு 10 (கோ எடிஷன்) இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்குவதாக உள்ளது. கேமராவினைப் பொறுத்தவரை இது பின்புறத்தில் 13எம்பி பிரைமரி லென்ஸ், 2எம்பி டெப்த் சென்சார் மற்றும் 5எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது.

மெமரி அளவினைப் பொறுத்தவரை 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி மற்றும் கூடுதலாக 512ஜிபி மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது.  மேலும் இது பேட்டரி அளவினைப் பொறுத்தவரையில் 3000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 10 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது.

பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை கைரேகை சென்சார் கொண்டுள்ளது. இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை 4 ஜி வோல்டிஇ, புளூடூத் 4.2, வைஃபை 802.11 பி / ஜி ஃ/என், ஜிபிஎஸ், க்ளோனாஸ், 3.5 மிமீ ஆடியோ ஜாக் மற்றும் மைக்ரோ யுஎஸ்பி போர்ட கொண்டுள்ளது.

Related posts

மார்ச் மாதம் களமிறங்கும் ஒன்பிளஸ் 8 ப்ரோ!

TechNews Tamil

களமிறங்க காத்திருக்கும் ஹானர் 9எக்ஸ் ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

Funtouch OS 9.1 உடன் களமிறங்கிய Vivo Z1x இன் சிறப்பம்சங்கள்!

TechNews Tamil