Mobile

இந்தியாவில் அசரவைக்கும் அம்சங்களுடன் மோட்டோரோலா எட்ஜ் 30 ஸ்மார்ட்போன் வெளியீடு!

மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான மோட்டோரோலா நிறுவனம் மோட்டோரோலா எட்ஜ் 30 ஸ்மார்ட்போனை இந்தியாவில் வெளியிட்டுள்ளது.

மோட்டோரோலா எட்ஜ் 30 ஸ்மார்ட்போன் 6.7 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பு, 1,080×2,400 பிக்சல் தீர்மானம், 20:9 என்ற திரைவிகிதம், 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், எச்டிஆர் 10 பிளஸ் ஆதரவு கொண்டுள்ளது.

மோட்டோரோலா எட்ஜ் 30 ஸ்மார்ட்போன் மிகவும் எதிர்பார்த்த ஆக்டோ-கோர் ஸனாப்டிராகன் 778G+ சிப்செட் வசதி கொண்டுள்ளது.

Motorola launches Edge 30 smartphone in India

இயங்குதளம் என்று கொண்டால் MyUX சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டுள்ளது.

கேமரா அளவாக மோட்டோரோலா எட்ஜ் 30 ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 50எம்பி பிரைமரி கேமரா, 50எம்பிவைடு ஆங்கிள் லென்ஸ், 2எம்பி டெப்த் சென்சார் மற்றும் முன்புறத்தில் 32எம்பி கேமராவைக் கொண்டுள்ளது.

மோட்டோரோலா எட்ஜ் 30 4020 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 33 வாட் டர்போபவர் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவாக 5ஜி, டூயல் 4ஜி, வைஃபை 802.11ஏஎக்ஸ், ப்ளூடூத் வி5.2, ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் கொண்டுள்ளது.

Related posts

மலேசியாவில் அறிமுகமான ஹூவாய் நோவா 8ஐ ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

செப்டம்பர் 25 இல் அறிமுகமாகும் ரெட்மி 8ஏ ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

ஜூலை மாதம் அறிமுகமாகவுள்ள ரெட்மி 9ஏ ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil