Mobile

விரைவில் களமிறங்கத் தயாராகி வரும் மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ இ 7 ஸ்மார்ட்போன்!!

மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான மோட்டோரோலா நிறுவனம் மோட்டோ இ 7 ஸ்மார்ட்போன் மாடலை வெகு விரைவில் அறிமுகம் செய்ய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த மோட்டோ இ 7 ஸ்மார்ட்போனின் விவரங்கள் குறித்து இப்போது பார்க்கலாம். மோட்டோ இ 7 ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளேவினைக் கொண்டு இருக்கும் என்று தெரிகிறது. மேலும் 1080 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாகவும் இருக்கும்.

மோட்டோ இ 7 ஸ்மார்ட்போன் ஆனது மெமரி அளவினைப் பொறுத்தவரை 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்டதாகவும் மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவினைக் கொண்டதாகவும் இருக்கின்றது.

விரைவில் களமிறங்கத் தயாராகி வரும் மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ இ 7 ஸ்மார்ட்போன்!!

மோட்டோ இ 7 ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 48 எம்பி பிரைமரி கேமரா, 2எம்பி செகண்டரி கேமரா போன்றவற்றினையும் மேலும் முன்புறத்தில் 16எம்பி செல்பீ கேமராவினையும் கொண்டதாகவும் இருக்கும்.

மேலும் எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் கொண்டதாகவும், மேலும் இது குவால்காம் ஸ்னாப்டிராகன் சிப்செட் வசதி கொண்டதாகவும் இருக்கும்.

மேலும் இயங்குதளத்தினைப் பொறுத்தவரை ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும் தன்மை கொண்டு இருக்கும் என்று தெரிகின்றது.

மோட்டோ இ 7 ஸ்மார்ட்போன் 4000 எம்ஏஎச் பேட்டரி கொண்டிருக்கும் என்றும் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கும் என்றும் தெரிகிறது.

இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரையில் 4 ஜி எல்டிஇ, வைஃபை, ப்ளூடூத், ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ் மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் போன்றவற்றினைக் கொண்டிருக்கும் என்று தெரிகிறது.

Related posts

சீனாவில் நாளை அறிமுகமாகிறது ஹானர் எக்ஸ் 10 மேக்ஸ்!!

TechNews Tamil

ஐரோப்பாவில் அறிமுகமானது ரியல்மி எக்ஸ்3 சூப்பர்ஜூம் ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

நவம்பர் 20 ஆம் தேதி அறிமுகமாகும் எக்ஸ்2 ப்ரோ ஸ்மார்ட்போன்

TechNews Tamil