Mobile

ஏப்ரல் 22 ஆம் தேதி அறிமுகம் அறிமுகமாகவுள்ள மோட்டோரோலா எட்ஜ்.!

மோட்டோரோலா நிறுவனம் மோட்டோரோலா எட்ஜ் என்ற ஸ்மார்ட்போனை ஏப்ரல் 22 ஆம் தேதி அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மோட்டோரோலா எட்ஜ் ஸ்மார்ட்போன் 6.67 இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளேவினையும், 1,080×2,340 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாகவும் உள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 765 அல்லது ஸ்னாப்டிராகன் 765ஜி எஸ்ஒசி சிப்செட் கொண்டிருக்கும் என்று தெரிகிறது.

மேலும் இது ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு இருக்கும் என்று கூறப்படுகின்றது. மெமரி அளவினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் ஆனது 6ஜிபி/8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்டிருக்கும்.

ஏப்ரல் 22 ஆம் தேதி அறிமுகம் அறிமுகமாகவுள்ள மோட்டோரோலா எட்ஜ்.!

மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவினைக் கொண்டதாகவும் உள்ளது. பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை கைரேகை சென்சார் வசதி கொண்டிருக்கும்.

கேமராவினைப் பொறுத்தவரை பின்புறம் 64எம்பி மெயின் கேமரா, 16எம்பி செகன்டரி சென்சார், 8எம்பி ஏஐ கேமரா சென்சார் போன்றவற்றினையும், முன்புறத்தில் 16எம்பி செல்பீ கேமராவையும் கொண்டிருக்கும்.

மோட்டோரோலா எட்ஜ் ஸ்மார்ட்போன் 4000எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாகவும், இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை இது டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 5.1ஏஎக்ஸ்,புளூடூத் 5.1 எல்இஇ ஜிபிஎஸ்இஎன்எப்சி, யூ.எஸ்.பி 3.1 டைப்-சி போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

Related posts

5ஜி ஐபோன் திட்டமிட்டபடி வெளியாகும்… ஆப்பிள் தலைமை செயல் அதிகாரி டிம் குக் தகவல்!!

TechNews Tamil

கொரியாவில் களம் இறங்கியது LG நிறுவனத்தின் Q31 ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

அதிரடியாக களமிறங்கிய விவோ எக்ஸ்30 ப்ரோ

TechNews Tamil