Mobile

ரூ. 57,810 மதிப்பில் சிறப்பம்சங்களுடன் மோட்டோரோலா எட்ஜ் ஸ்மார்ட்போன்!!

மோட்டோரோலா நிறுவனம் நேற்று மோட்டோரோலா எட்ஜ்  ஸ்மார்ட்போனை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் குறித்த அம்சங்களை இப்போது பார்க்கலாம்.

மோட்டோரோலா எட்ஜ் ஸ்மார்ட்போன் விலை – இந்திய மதிப்பில் ரூ. 57,810

மோட்டோரோலா எட்ஜ் ஸ்மார்ட்போன் 6.7 இன்ச் 2340×1080 பிக்சல் FHD+ AMOLED ஹெச்டிஆர்10 பிளஸ் டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது.

மேலும் இது ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 765 ஜி பிராசஸர் வசதியையும், அட்ரினோ 620 GPU வசதியையும் கொண்டுள்ளது.

ரூ. 57,810 மதிப்பில் சிறப்பம்சங்களுடன் மோட்டோரோலா எட்ஜ் ஸ்மார்ட்போன்!!

மெமரி அளவினைப் பொறுத்தவரை இது 4 ஜிபி / 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி வசதியினையும், ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தினையும் கொண்டுள்ளது.

கேமராவினைப் பொறுத்தவரை பின்புறத்தில் இது 64 எம்பி பிரைமரி கேமரா, 16 எம்பி 117° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 8 எம்பி டெலிபோட்டோ லென்ஸ் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

முன்புறத்தில் 25 எம்பி செல்ஃபி கேமராவினைக் கொண்டுள்ளது. பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சாரினைக் கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை 3.5 எம்எம் ஆடியோ ஜாக், 5ஜி SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, யுஎஸ்பி டைப்-சி போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

மேலும் 4500 எம்ஏஹெச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீடு குறித்த விவரங்கள் தற்போது வரை வெளியாகவில்லை.

Related posts

சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட்2 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

TechNews Tamil

புத்தாண்டினை ஒட்டி அறிமுகமாகும் கேலக்ஸி எஸ்10 லைட்!!

TechNews Tamil

நோக்கியா 3.4 ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியானது!

TechNews Tamil