Mobile

சீனாவில் வெளியாகியுள்ள மோட்டோரோலா எட்ஜ் எஸ் ஸ்மார்ட்போன்!!

மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான மோட்டோரோலா நிறுவனம் தற்போது மோட்டோரோலா எட்ஜ் எஸ் ஸ்மார்ட்போனை சீனாவில் வெளியிட்டுள்ளது. இந்த மோட்டோரோலா எட்ஜ் எஸ் ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

மோட்டோரோலா எட்ஜ் எஸ் ஸ்மார்ட்போன் 6.7 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே மற்றும் 2520×1080 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாகவும் உள்ளது.

மேலும் இது மெமரி அளவினைப் பொறுத்தவரையில் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி மற்றும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவினைக் கொண்டுள்ளது.

சீனாவில் வெளியாகியுள்ள மோட்டோரோலா எட்ஜ் எஸ் ஸ்மார்ட்போன்!!

மோட்டோரோலா எட்ஜ் எஸ் ஸ்மார்ட்போன் குவால்காம் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 870 சிப்செட் வசதியினைக் கொண்டதாகவும் அட்ரினோ 650 ஜிபியு ஆதரவைக் கொண்டதாகவும் உள்ளது.

மேலும் இயங்குதளத்தினைப் பொறுத்தவரை ஆண்ட்ராய்டு 11 சார்ந்த Motorola MyUI இயங்குதளத்தை கொண்டு இயங்குவதாக உள்ளது.

கேமராவினைப் பொறுத்தவரையில் பின்புறத்தில் 64எம்பி பிரைமரி சென்சார், 16எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ், 2எம்பி டெப்த் சென்சார் மற்றும் 16எம்பி மற்றும் 8எம்பி டூயல் செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது.

மேலும் மோட்டோரோலா எட்ஜ் எஸ் ஸ்மார்ட்போன் பேட்டரி அளவினைப் பொறுத்தவரையில் 5000 எம்ஏஎச் பேட்டரி கொண்டதாகவும் 20 வாட் டர்போ சார்ஜிங் ஆதரவினைக் கொண்டதாகவும் உள்ளது.

இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரையில் 5 ஜி, டூயல் 4 ஜி, வோல்டிஇ, VoWi-Fi, வைஃபை 6, புளூடூத் 5.2, ஜிபிஎஸ் மற்றும் ஒரு யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

Related posts

அக்டோபர் 4 முதல் விற்பனையைத் துவங்கும் ஒப்போ ரெனோ 2எப் ஸ்மார்ட்போன்.!

TechNews Tamil

போக்கோ எஃப்2 என்ற பெயரில் இந்தியாவில் வெளியாகும் ரெட்மி கே30 ப்ரோ!!

TechNews Tamil

ரெட்மி 7 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு 10 அப்டேட்!

TechNews Tamil