Mobile

விரைவில் அறிமுகமாகவுள்ள மோட்டோரோலா எட்ஜ் பிளஸ்!

மோட்டோரோலா நிறுவனம் தனது மோட்டோரோலா எட்ஜ் பிளஸ் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது.

இந்த மோட்டோரோலா எட்ஜ் பிளஸ் ஸ்மார்ட்போன் குறித்த விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளது.

இந்த மோட்டோரோலா எட்ஜ் பிளஸ் 6.5 இன்ச் டிஸ்பிளேவினைக் கொண்டதாக உள்ளது. மேலும் இதன் டிஸ்பிளே வடிவமைப்பானது ஐபோன் மாடல்களைப் போல் இருக்கும் என்று தெரிகிறது.

விரைவில் அறிமுகமாகவுள்ள மோட்டோரோலா எட்ஜ் பிளஸ்!

மேலும் இது 1080 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாக உள்ளது. மெமரியினைப் பொறுத்தவரை 8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி கொண்டுள்ளது.

மேலும் இது கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவினைக் கொண்டிருக்கும். இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 865 சிப்செட் வசதி கொண்டுள்ளது.

இது 5ஜிபி ஆதரவினைக் கொண்டிருக்க வாய்ப்புள்ளது. இது ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும் தன்மை கொண்டுள்ளது.

மோட்டோரோலா எட்ஜ் பிளஸ் கேமரா மோட்டோரோலா எட்ஜ் பிளஸ் மூன்று ரியர் கேமராவினையும், முன்புறத்தில் 32எம்பி செல்பீ கேமராவினையும் கொண்டுள்ளது.

மோட்டோரோலா எட்ஜ் பிளஸ் ஸ்மார்ட்போன் 4000எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது. மேலும் இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்றவற்றைக் கொண்டுள்ளது.

Related posts

அசத்தலான அம்சங்களுடன் வெளியான LG G Pad 5 10.1!

TechNews Tamil

அறிமுகமாகவுள்ள மோட்டோரோலா மோட்டோ ஜி8 பவர் லைட்!

TechNews Tamil

இணையத்தில் கசிந்த மோட்டோரோலா மோட்டோ ஜி பிளே 2021 ஸ்மார்ட்போனின் விவரங்கள்!!

TechNews Tamil