மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான மோட்டோரோலா நிறுவனம் தற்போது சீனாவில் மோட்டோரோலா எட்ஜ் 20 ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது. இந்த மோட்டோரோலா எட்ஜ் 20 ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களைப் பார்க்கலாம்.
மோட்டோரோலா எட்ஜ் 20 ஸ்மார்ட்போன் ஆனது 6.7 இன்ச் OLED டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது.
மேலும் இந்த ஸ்மார்ட்போன் 144ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் எச்டிஆர் பிளஸ் ஆதரவினைக் கொண்டுள்ளது.
மோட்டோரோலா எட்ஜ் 20 ஸ்மார்ட்போன் சிப்செட் என்று கொண்டால் குவால்காம் ஸ்னாப்டிராகன் 778 5ஜி எஸ்ஒசி வசதியினைக் கொண்டுள்ளது. மெமரி அளவாக 8ஜிபி மெமரி மற்றும் 128ஜிபி அளவாகக் கொண்டுள்ளது.

கேமரா அளவு என்று கொண்டால் 108எம்பி பிரைமரி சென்சார், 16எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 8எம்பி 30X Super Zoom டெலிபோட்டோ லென்ஸ் மற்றும் 32எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது.
பேட்டரி என்று கொண்டால் 4000 எம்ஏஎச் டர்போ பவர் 30 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவினைக் கொண்டுள்ளது.
இயங்குதளம் என்று பார்க்கையில் ஆண்ட்ராய்டு 11 5ஜி இயங்குதளத்தினைக் கொண்டதாக உள்ளது. இணைப்பு ஆதரவாக வைஃபை 6 ஜிபிஎஸ் புளூடூத் கொண்டுள்ளது.