மோட்டோரோலா நிறுவனம் தனது புதிய 75-இன்ச் ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி மாடலை அறிமுகம் செய்யவுள்ளது, அதன்பின்னர் இந்த டிவி சிறிது காலத்திலேயே விற்பனைக்கு வர உள்ளது.
இந்த டிவியானது ரூ.1,19,999 க்கு பிளிப்கார்ட் தளத்தில் விரைவில் விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது.
இந்த ஸ்மார்ட் டிவி மாடல் குறித்த விலையானது பிளிப்கார்ட் தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மோட்டோரோலா 75 இன்ச் ஸ்மார்ட் டிவி 4கே ஐபிஎஸ் எல்இடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, மேலும் இது 3840 x 2160 பிக்சல் தீர்மானத்தைக் கொண்டுள்ளது.
இது 60Hz refresh rate, 178 டிகிரி கோணம், 450 nits brightness, போன்ற ஆதரவுகளையும் கொண்டுள்ளது.
டால்பி விஷன் உடன் எச்டிஆர் 10 டெக்னாலஜி இதில் இருக்கும் என்று தெரிகிறது.
இது குவாட்-கோர் கார்டெக்ஸ் ஏ53 சிபுயு வசதியைக் கொண்டுள்ளது, மேலும் 1.0ஜிகாஹெர்ட்ஸ் மாலி450 குவாட்-கோர் போன்றவையும் இதில் உள்ளது.
ஆண்ட்ராய்டு 9பை இயங்குதளத்தை கொண்டு இயங்கக்கூடியதாக உள்ளது.
யூ.எஸ்.பி போர்ட்கள், மூன்று எச்.டி.எம்.ஐ போர்ட்கள், வைஃபை மற்றும் ஆர்.ஜே 45 ஈதர்நெட் போர்ட், போன்ற இணைப்பு ஆதரவுகள் இதில் உள்ளது