மோட்டோரோலா நிறுவனத்தின் 75 இன்ச் ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி சமீபத்தில் அறிமுகமானது. இந்த டிவி நேற்று முதல் அதன் விற்பனையினை துவக்கி உள்ளது.
மோட்டோரோலா 75-இன்ச் ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவியின் விலை- ரூ.1,19,999
இந்த ஸ்மார்ட் டிவி 4கே ஐபிஎஸ் எல்இடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டதாக உள்ளது, மேலும் இது 3840 x 2160 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாக உள்ளது.
இந்த ஸ்மார்ட்டிவி டால்பி விஷன் + எச்டிஆர் 10 தொழில்நுட்பத்தை கொண்டதாக உள்ளது.

மேலும் இது 30W பாக்ஸ் ஸ்பீக்கர் உடன் டிடிஎஸ் ட்ரூசரவுண்ட்டிங்கை கொண்டுள்ளது.
மேலும் இது குவாட்-கோர் கார்டெக்ஸ் ஏ53 சிபுயு வசதி கொண்டதாக உள்ளது. இது 1.0ஜிகாஹெர்ட்ஸ் மாலி450 குவாட்கோர் உள்ளிட்ட மென்பொருள் ஆதரவினைக் கொண்டுள்ளது.
இது ஆண்ட்ராய்டு 9பை இயங்குதளத்தை கொண்டுள்ளது.
யூ.எஸ்.பி போர்ட்கள், எச்.டி.எம்.ஐ போர்ட்கள், வைஃபை மற்றும் ஆர்.ஜே 45 ஈதர்நெட் போர்ட், போன்ற இணைப்பு போன்ற ஆதரவுகளை கொண்டுள்ளது.