Gadgets

7700எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் மோட்டோ ஜி70 எல்டிஇ டேப் இந்தியாவில் அறிமுகம்!

மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான மோட்டோரோலா நிறுவனம் தற்போது மோட்டோ டேப் ஜி70 எல்டிஇ என்ற டேப்லெட் மாடலை இந்தியாவில் வெளியிட்டுள்ளது.

மோட்டோ டேப் ஜி70 எல்டிஇ டேப் 11 இன்ச் 2கே எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பு, 2000 x 1200 பிக்சல் தீர்மானம், 400 நிட்ஸ் ப்ரைட்னஸ், 15:9 என்ற திரைவிகிதம் கொண்டுள்ளது.

மோட்டோ டேப் ஜி70 எல்டிஇ மீடியாடெக் ஹீலியோ ஜி90டி சிப்செட் வசதியை கொண்டுள்ளது. மேலும் இது சிறப்பு அம்சங்களாக இரண்டு கார்டெக்ஸ்-A76 கோர்கள், Mali-G76 GPU ஆதரவு கொண்டுள்ளது.

7700எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் மோட்டோ ஜி70 எல்டிஇ டேப் இந்தியாவில் அறிமுகம்!

இயங்குதளமாக ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டுள்ளது.

மோட்டோ டேப் ஜி70 எல்டிஇ மெமரி அளவாக 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதியுடன் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது.

மோட்டோ டேப் ஜி70 எல்டிஇ கேமரா அளவாக பின்புறத்தில் 13எம்பி கேமரா, முன்புறத்தில் 8எம்பி கேமரா ஆதரவு கொண்டுள்ளது.

மேலும் இந்த டேப் டால்பி அட்மாஸ் ஆதரவுடன் இயங்கும் குவாட் ஸ்பீக்கர்களைக் கொண்டுள்ளது.

மோட்டோ டேப் ஜி70 எல்டிஇ 7700எம்ஏஎச் பேட்டரியுடன் 20 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவாக வைஃபை 802.11,ப்ளூடூத் 5.1, யுஎஸ்பி டைப்-சி போர்ட் கொண்டுள்ளது.

Related posts

அறிமுகமானது நோக்கியா 55 இன்ச் ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டி.வி!!

TechNews Tamil

சோனி அறிமுகம் செய்த புதிய ஹெட்போன்!!

TechNews Tamil

99 ரூபாயில் ஆப்பிள் டிவி+ சந்தா!!

TechNews Tamil