Mobile

மோட்டோ நிறுவனத்தின் மோட்டோ ஜி9 பவர் ஸ்மார்ட்போன் அறிமுகம்!!

மோட்டோ நிறுவனத்தின் மோட்டோ ஜி9 பவர் ஸ்மார்ட்போன் ஆனது தற்போது வெளியாகி உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பு அம்சங்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

மோட்டோ ஜி 9 பவர் ஸ்மார்ட்போன் எலக்ட்ரிக் வயலட் மற்றும் மெட்டாலிக் சேஜ் வண்ணங்களில் வெளியாகி உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆசியா, லத்தீன் அமெரிக்கா போன்ற நாடுகளில் விற்பனைக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது.

மோட்டோ ஜி 9 பவர் ஸ்மார்ட்போன் ஆனது 6.8 இன்ச் எச்டி ப்ளஸ் (720×1,640 பிக்சல்கள்) ஐபிஎஸ் டிஸ்ப்ளேவினைக் கொண்டதாக உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 662 எஸ்ஓசி செயலி மூலம் இயங்குவதாக உள்ளது.

மோட்டோ நிறுவனத்தின் மோட்டோ ஜி9 பவர் ஸ்மார்ட்போன் அறிமுகம்!!

மேலும் மெமரி அளவினைப் பொறுத்தவரை 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு வசதியினைக் கொண்டதாகவும், மேலும் 512 ஜிபி வரை மெமரி நீட்டிப்பு வரை மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட் வசதியினைக் கொண்டுள்ளது.

மோட்டோ ஜி 9 பவர் ஸ்மார்ட்போன் கேமரா அளவினைப் பொறுத்தவரை 64 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 2 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார், 2 மெகாபிக்சல் ஆழ சென்சார் போன்றவற்றினையும், மேலும் முன்புறத்தில் 16 மெகாபிக்சல் செல்பி கேமராவினைக் கொண்டுள்ளது.

பேட்டரி அளவினைப் பொறுத்தவரை 6000 எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாகவும், 20 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சத்தினைக் கொண்டுள்ளது.

பேட்டரி ஆயுளானது 60 மணிநேரம் வரையானது இருக்கும். இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை வைஃபை, ப்ளூடூத் வி5, யூஎஸ்பி டைப்சி போர்ட் கொண்டுள்ளது.

Related posts

தென் கொரியாவில் அறிமுகமான LG X2 (2019)!

TechNews Tamil

இந்தியாவில் வெளியான சாம்சங் கேலக்ஸி ஏ52 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

ஹுவாய் நிறுவனம் வெளியிட்டுள்ள MatePad T8 டேப்லெட்!

TechNews Tamil