மோட்டோரோலா நிறுவனம் மோட்டோ ஜி9 ஸ்மார்ட்போனை ஸ்விட்சர்லாந்தில் வெளியிட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆகஸ்ட் 31 ஆம் தேதி விற்பனைக்கு வரவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோட்டோ ஜி9 ஸ்மார்ட்போன் குறித்த சிறப்பம்சங்களை இப்போது பார்க்கலாம். மோட்டோ ஜி9 ஸ்மார்ட்போன் ஆனது 6.5எச்டி பிளஸ் மேக்ஸ் விஷன் டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது.
மேலும் இது 1600×720 பிக்சல்கள் தீர்மானம் கொண்டுள்ளது. மோட்டோ ஜி9 ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 662 பிராசஸர் வசதி கொண்டுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும் தன்மை கொண்டுள்ளது.

கேமராவைப் பொறுத்தவரை மோட்டோ ஜி9 ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 48எம்பி பிரைமரி லென்ஸ், 2எம்பி டெப்த் சென்சார், 2எம்பி மேக்ரோ லென்ஸ் போன்றவற்றினையும் மேலும் 8எம்பி செல்பீ கேமராவினையும் கொண்டுள்ளது.
மெமரி அளவினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்டுள்ளது. மேலும் இது மெமரி நீட்டிப்பு ஆதரவினைக் கொண்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் பின்புறத்தில் கைரேகை சென்சார் வசதியினைக் கொண்டுள்ளது. மேலு மோட்டோ ஜி9 ஸ்மார்ட்போன் 5000எம்ஏஎச் பேட்டரி கொண்டுள்ளது.
இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை இரட்டை 4 ஜி வோல்டிஇ, வைஃபை 802.11 பி / ஜி / என், புளூடூத் 5.0, ஜிபிஎஸ், க்ளோனாஸ், என்எப்சி, யூ.எஸ்.பி டைப்-சி, 3.5 மிமீ ஆடியோ ஜாக் மற்றும் இரட்டை சிம் ஆதரவு போன்றவற்றினைக் கொண்டுள்ளது.