மோட்டோரோலா நிறுவனம் தற்போது மோட்டோ ஜி9 பவர் ஸ்மார்ட்போன் ஆசியா, லத்தீன் அமெரிக்கா போன்ற நாடுகளில் ஏற்கனவே வெளியாகியுள்ள நிலையில் இன்று இந்தியாவில் அறிமுகம் ஆகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் எலக்ட்ரிக் வயலட் மற்றும் மெட்டாலிக் சேஜ் வண்ணங்களில் வெளியாகியுள்ளது.
இந்த மோட்டோ ஜி9 பவர் ஸ்மார்ட்போன் ஆனது 6.8 இன்ச் எச்டி ப்ளஸ் டிஸ்பிளேவினைக் கொண்டதாகவும், மேலும் 720×1,640 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாகவும் உள்ளது.
மேலும் இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 662 எஸ்ஓசி செயலி மூலம் இயங்கும் தன்மை கொண்டுள்ளது. மெமரி அளவினைப் பொறுத்தவரை 4 ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி சேமிப்பு வசதியினையும் கொண்டுள்ளது.

மேலும் 512 ஜிபி வரை மெமரியினை மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட் நீட்டிக்க கூடியதாகவும் உள்ளது. மோட்டோ ஜி 9 பவர் ஸ்மார்ட்போன் ஆனது 64 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 2 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார், 2 மெகாபிக்சல் ஆழ சென்சார் போன்றவற்றினையும் முன்புறத்தில் 16 மெகாபிக்சல் செல்பி கேமரா கொண்டுள்ளது.
மோட்டோ ஜி 9 பவர் ஸ்மார்ட்போன் ஆனது 6000 எம்ஏஎச் பேட்டரி கொண்டதாகவும், மேலும் இது 20 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சம் கொண்டுள்ளது.
இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை வைஃபை, ப்ளூடூத் வி5, யூஎஸ்பி டைப்சி போர்ட் போன்றவற்றினையும், பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை மோட்டோ ஜி 9 பவர் ஸ்மார்ட்போன் ஆனது கைரேகை சென்சார் மற்றும் ஃபேஸ் அன்லாக் கொண்டுள்ளது.