மோட்டோரோலா நிறுவனம் தனது மோட்டோ ஜி 9 பவர் ஸ்மார்ட்போனை இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்போது மோட்டோ ஜி 9 பவர் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.
மோட்டோ ஜி9 பவர் ஸ்மார்ட்போன் ஆனது 6000 எம்ஏஎச் பேட்டரி கொண்டிருக்கும். மேலும் இது சார்ஜிங்க் ஆதரவினைப் பொறுத்தவரையில் 20 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சத்தினைக் கொண்டுள்ளது.
மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது 6.78 இன்ச் ஐபிஎஸ் எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆனது ஸ்னாப்டிராகன் 662 எஸ்ஓசி செயலி கொண்டு இயங்கும் தன்மை கொண்டுள்ளது.

மெமரி அளவினைப் பொறுத்தவரை இது 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு வசதியினைக் கொண்டு இருக்கும் என்று தெரிகிறது.
மேலும் இந்த மோட்டோ ஜி 9 பவர் பின்புறத்தில் 64 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 2 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார், 2 மெகாபிக்சல் ஆழ சென்சார் முன்புறத்தில் 16 மெகாபிக்சல் செல்பி கேமராவினைக் கொண்டுள்ளது.