Mobile

மலேசியாவில் களம் இறங்கிய மோட்டோ ஜி 9 பவர் ஸ்மார்ட்போன்!!

மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான மோட்டோரோலா நிறுவனம் மோட்டோ ஜி9 பவர் ஸ்மார்ட்போனை மலேசியாவில் வெளியிட்டுள்ளது. இந்த மோட்டோ ஜி 9 பவர் ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

மோட்டோ ஜி 9 பவர் ஸ்மார்ட்போன் ஆனது 6.8 இன்ச் ஹெச்டி பிளஸ் மேக்ஸ் விஷன் ஸ்கிரீன் டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது, மேலும் இது பிராசசர் வசதியினைப் பொறுத்தவரை ஸ்னாப்டிராகன் 662 பிராசஸர் கொண்டுள்ளது.

மெமரி அளவினைப் பொறுத்தவரை, 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியினைக் கொண்டுள்ளது.

மலேசியாவில் களம் இறங்கிய மோட்டோ ஜி 9 பவர் ஸ்மார்ட்போன்!!

மேலும் கேமராவினைப் பொறுத்தவரை 64 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி டெப்த் மற்றும் 2 எம்பி மேக்ரோ கேமரா, 16 எம்பி செல்பி கேமரா போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

மேலும் பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரையில் பின்புறத்தில் கைரேகை சென்சார் கொண்டதாகவும், மேலும் பேட்டரி அளவினைப் பொறுத்தவரை 6000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டதாகவும், மேலும் 20 வாட் டர்போ பவர் சார்ஜிங் வசதி கொண்டதாகவும் உள்ளது.

மேலும் மோட்டோ ஜி9 பவர் ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 மற்றும் மை யுஎக்ஸ் கொண்டதாகவும், மேலும் 3.5 எம்எம் ஹெட்போன் ஜாக், டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட், டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, யுஎஸ்பி டைப் சி போன்றவற்றினை இணைப்பு ஆதரவாகக் வழங்கப்பட்டுள்ளது.

Related posts

மேம்பட்ட அம்சங்களுடன் ஒப்போ ஏ52 ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

ஹூவாய் போனை பயன்படுத்தும் ஒன் பிளஸ் விளம்பர தூதர்!

TechNews Tamil

சீனாவில் மடிக்கக்கூடிய வகையிலான மேட் எக்ஸ்2 ஸ்மார்ட்போன் அறிமுகம்!!

TechNews Tamil