மோட்டோரோலா நிறுவனம் இந்தியாவில் மோட்டோ ஜி 9 பிளஸ் ஸ்மார்ட்போனை வெளியிட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஐரோப்பியாவில் ஏற்கனவே அறிமுகம் ஆகியுள்ள மோட்டோ ஜி 9 பிளஸ் ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.
மோட்டோ ஜி 9 பிளஸ் ஸ்மார்ட்போன் 6′ இன்ச் உடன் 2400 x 1080 பிக்சல் தீர்மானம் கொண்டதாகவும், மேலும் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளேவினைக் கொண்டதாகவும் உள்ளது.
பிராசஸர் வசதியினைப் பொறுத்தவரை ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 730 ஜி சிப்செட் வசதியினைக் கொண்டுள்ளது.

மெமரி அளவினைப் பொறுத்தவரை 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வசதியினைக் கொண்டுள்ளது.
இயங்குதளத்தினைப் பொறுத்தவரையில் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் கொண்டதாகவும், மேலும் கேமரா அமைப்பினைப் பொறுத்தவரை குவாட்-கேமரா அமைப்பில் 64 மெகாபிக்சல் பிரைமரி கேமரா, 8 மெகாபிக்சல் வைடு ஆங்கிள் லென்ஸ், 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார், 2 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார் மற்றும் 16 மெகாபிக்சல் செல்ஃபி கேமராவினைக் கொண்டுள்ளது.
பேட்டரி அளவினைப் பொறுத்தவரையில் 30W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு மற்றும் 5,000 எம்ஏஎச் பேட்டரி கொண்டுள்ளது.