Mobile

ஐரோப்பியாவில் அறிமுகமாகியுள்ளது மோட்டோ ஜி 9 பிளஸ் ஸ்மார்ட்போன்!

மோட்டோரோலா நிறுவனம் ஐரோப்பியாவில் மோட்டோ ஜி 9 பிளஸ் ஸ்மார்ட்போனை வெளியிட்டு உள்ளது. இந்த மோட்டோ ஜி 9 பிளஸ் போன் குறித்த விவரங்களைப் பார்க்கலாம்.

மோட்டோ ஜி 9 பிளஸ் ஸ்மார்ட்போன் மோட்டோ ஜி 9 பிளஸ் ஸ்மார்ட்போன் 6.8 இன்ச் கொண்ட 2400 x 1080 பிக்சல் தீர்மானம் உடைய முழு எச்டி பிளஸ் டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 730 ஜி ஆக்டா கோர் செயலி கொண்டு இயங்கும் தன்மை கொண்டு இயங்குவதாய் உள்ளது. மேலும் மைக்ரோ எஸ்டி ஆதரவினைக் கொண்டுள்ளது.

மேலும் மெமரி அளவினைப் பொறுத்தவரை 128 ஜிபி சேமிப்பகத்தினைக் கொண்டதாகவும், 4 ஜிபி ரேம் அம்சத்தினைக் கொண்டதாகவும் உள்ளது.

ஐரோப்பியாவில் அறிமுகமாகியுள்ளது மோட்டோ ஜி 9 பிளஸ் ஸ்மார்ட்போன்!

இந்த ஸ்மார்ட்போன் கேமராவினைப் பொறுத்தவரை மோட்டோ ஜி 9 பிளஸ், குவாட்-கேமரா அமைப்பினைக் கொண்டுள்ளது. மேலும் 64 மெகாபிக்சல் கொண்ட முதன்மை கேமரா, 8 மெகாபிக்சல் கொண்ட வைட்-ஆங்கிள் கேமரா, 2 மெகாபிக்சல் கொண்ட டெப்த் சென்சார் மற்றும் 2 மெகா பிக்சல் கொண்ட மேக்ரோ லென்ஸ் கேமரா வழங்கப்பட்டுள்ளது.

மோட்டோ ஜி 9 பிளஸ் முன்பக்கத்தில், 16 மெகாபிக்சல் கொண்ட பஞ்ச் ஹோல் டிஸ்பிளே கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.

பேட்டரி ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தினைக் கொண்டு இயங்குவதாய் உள்ளது.  மேலும் இது 5,000 எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது. மேலும் இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை கைரேகை ஸ்கேனருடன், மோட்டோ ஜி 9 பிளஸ் புளூடூத் 5.0, வைஃபை, வோல்டிஇ, 3.5 மிமீ ஆடியோ ஜாக் மற்றும் இரட்டை சிம் ஆதரவினைக் கொண்டுள்ளது.

Related posts

இன்னும் 2 நாளில் அறிமுகமாகிறது சாம்சங் ஏ 21 எஸ் ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

ஓப்போ F11 ப்ரோவின் அசத்தலான விலைகுறைப்பு!!

TechNews Tamil

10,000 முதல் 20,000 வரை விலை குறைந்த ஐபோன்கள்!!!

TechNews Tamil