Mobile

இந்தியாவில் அசத்தலான அம்சங்களுடன் மோட்டோ ஜி82 5ஜி ஸ்மார்ட்போன்!

மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான மோட்டோரோலா நிறுவனம் தற்போது மோட்டோ ஜி82 5ஜி ஸ்மார்ட்போனை இந்தியாவில் வெளியிட்டுள்ளது.

மோட்டோரோலா மோட்டோ ஜி82 5ஜி ஸ்மார்ட்போன் 6.6 இன்ச் முழு எச்டி ப்ளஸ் அமலாய்டு டிஸ்ப்ளே வசதி கொண்டுள்ளது.

மேலும் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம், 10 பிட் வண்ண ஆதரவு கொண்டுள்ளது. மோட்டோ ஜி82 5ஜி ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 எஸ்ஓசி மூலம் இயங்குவதாக உள்ளது.

Moto G82 5G smartphone with stunning features in India!

மெமரி அளவாக 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதி  கொண்டுள்ளது. பேட்டரி அளவாக 5000 எம்ஏஎச் பேட்டரியுடன் 30 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்டுள்ளது.

மோட்டோ ஜி82 5ஜி ஸ்மார்ட்போன் 50 எம்பி பிரதான கேமரா, 8 எம்பி அல்ட்ராவைட் இரண்டாம் நிலை கேமரா மற்றும் 2 எம்பி மேக்ரோ லென்ஸ் மூன்றாம் நிலை கேமரா மற்றும் முன்புறத்தில் 16 எம்பி கேமரா கொண்டுள்ளது.

மோட்டோ ஜி82 5ஜி ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம் கொண்டதாக உள்ளது.

Related posts

மலிவு விலையில் விற்பனைக்கு வரவுள்ள இன்பினிக்ஸ் எஸ்5 ப்ரோ!!

TechNews Tamil

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எம்12 ஸ்மார்ட்போன் வெளியீடு!

TechNews Tamil

சீனாவில் அறிமுகமாகியுள்ள ஹூவாய் என்ஜாய் 20 எஸ்இ ஸ்மார்ட்போன்!!!

TechNews Tamil