மோட்டோரோலா நிறுவனத்தின், மோட்டோ ஜி8 பிளே மற்றும் ஜி8 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் கடந்த மாதம் அறிமுகமானது.
இந்நிலையில் மோட்டோரோலா நிறுவனம் மோட்டோ ஜி8 ஸ்மார்ட்போனினை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மோட்டோ வரிசையில் வெளியாகும் மொபைல்கள் எப்போதுமே சிறப்பான வரவேற்பினைப் பெறும். காரணம், அதன் சிறப்பு அம்சங்கள் வாடிக்கையாளர்களை பெரிதாகவே கவர்கிறது.

மேலும் மோட்டோ வரிசை மொபைல்கள் எப்போதும் பட்ஜெட் விலையில் அறிமுகமாவது அனைவரும் அறிந்ததே, அந்த வரிசையில் இதுவும் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மோட்டோ ஜி8 ஸ்மார்ட்போன் 1520 * 720 பிக்சல் திர்மானம் கொண்டு ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தெரிகிறது.
இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 9பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டுள்ளது
மோட்டோ ஜி8 பிளே ஸ்மார்ட்போனில் 3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது,
மோட்டோ ஜி8 பிளே ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், ஜிபிஎஸ்,என்எப்சி போர்ட் போன்ற இணைப்பு ஆதரவுகளை இது கொண்டுள்ளது.