மோட்டோரோலா நிறுவனம் மோட்டோ ஜி 5G பிளஸ் ஸ்மார்ட்போனின் முதல் விற்பனையினை ஐரோப்பாவில் துவக்கியுள்ளது. இந்த மோட்டோ ஜி 5G பிளஸ் ஸ்மார்ட்போன் அடுத்த கட்டமாக சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற சந்தைகளில் வெளியாக உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த மோட்டோ ஜி 5G பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் கொண்டு இயங்குவதாக உள்ளது, மேலும் 6.7 இஞ்ச் முழு எச்டிஉடன் 1080×2520 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட எல்சிடி டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது.

இந்த போன் ஸ்னாப்டிராகன் 765 ஆக்டா கோர் SoCல் இயங்குவதாகவும் உள்ளது, மேலும் மெமரியினைப் பொறுத்தவரை இது 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி வரை உள்ளடக்க மெமரி வசதி கொண்டுள்ளது. மேலும் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் மூலம் 1TB வரை மெமரியினை விரிவாக்கம் செய்துகொள்ளவும் செய்யலாம்.
மோட்டோ ஜி 5G பிளஸ் ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 48 மெகாபிக்சல் பின்புற கேமரா, 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஆங்கிள் லென்ஸ், 5 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ் மற்றும் 2 மெகாபிக்சல் சென்சார் உள்ளது. முன்புறத்தில், இரட்டை செல்ஃபி கேமராவினையும், 16 மெகாபிக்சல் பிரதான சென்சார் மற்றும் 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஆங்கிள் லென்ஸ் கொண்டுள்ளது.
மேலும் மோட்டோ ஜி 5G பிளஸ் 5,000 எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாக உள்ளது, மேலும் இணைப்பு விருப்பத்தினைப் பொறுத்தவரையில் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட், 5 ஜி எஸ்.ஏ/ என்எஸ்ஏ, 3.5 மிமீ ஆடியோ ஜாக், புளூடூத் வி 5.1, வைஃபை போன்றவற்றினைக் கொண்டுள்ளது.