Mobile

சீனாவில் மோட்டோ ஜி51 ஸ்மார்ட்போன் வெளியீடு!

மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான மோட்டோரோலா நிறுவனம் தற்போது மோட்டோ ஜி51 ஸ்மார்ட்போனை சீனாவில் வெளியிட்டுள்ளது. இந்த மோட்டோ ஜி51 5ஜி ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

மோட்டோ ஜி51 5ஜி ஸ்மார்ட்போன் 6.8 இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதி, 720 x 1600 பிக்சல் தீர்மானம், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ் கொண்டுள்ளது.

கேமரா அளவாக மோட்டோ ஜி51 5ஜி ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 50எம்பி பிரைமரி சென்சார், 8எம்பி அல்ட்ரா வைடு சென்சார், 2எம்பி மேக்ரோ சென்சார் மற்றும் 13எம்பிசெல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது.

சீனாவில் மோட்டோ ஜி51 ஸ்மார்ட்போன் வெளியீடு!

மோட்டோ ஜி51 5ஜி குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 எஸ்ஒசி சிப்செட் வசதி கொண்டுள்ளது.

மேலும் இயங்குதள அளவாக ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டுள்ளது.

மெமரி அளவாக 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி மற்றும் கூடுதலாக மெமரி ஆதரவைக் கொண்டுள்ளது.

மோட்டோ ஜி51 5ஜி 5000 எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாக உள்ளது.

இணைப்பு ஆதரவாக இது 5ஜி ஆதரவு, புளூடூத் 5.2, வைஃபை 6, ஜிபிஎஸ், ஏ-ஜிபிஎஸ் கொண்டுள்ளது.

Related posts

ஆஃபர்களை அள்ளிக் கொடுக்கும் ப்ளிப்கார்ட் மொபைல் பொனான்சா சேல்!!

TechNews Tamil

சீனாவில் அறிமுகமானது விவோ 5ஜி ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

அமெரிக்காவில் அறிமுகமாகிறது மோட்டோ ஜி பாஸ்ட் ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil