Mobile

ஐரோப்பாவில் அறிமுகமான மோட்டோ ஜி50 ஸ்மார்ட்போன்!

மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான மோட்டோ நிறுவனம் தற்போது மோட்டோ ஜி50 ஸ்மார்ட்போனை ஐரோப்பாவில் வெளியிட்டுள்ளது. இந்த மோட்டோ ஜி50 ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

மோட்டோரோலா மோட்டோ ஜி50 ஸ்மார்ட்போன் அக்வா கிரீன் மற்றும் ஸ்டீல் க்ரே போன்ற வண்ணங்களில் கிடைக்கும்.

மோட்டோ ஜி50 ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் எச்டி, ரெசல்யூஷன் மற்றும் 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தினைக் கொண்டுள்ளது.

ஐரோப்பாவில் அறிமுகமான மோட்டோ ஜி50 ஸ்மார்ட்போன்!

இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 5ஜி செயலி மூலம் இயங்குவதாக உள்ளது. மேலும் இது 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்சேமிப்பினை மெமரி அளவாகக் கொண்டுள்ளது. மோட்டோ ஜி50 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ் மூலம் இயங்குவதாக உள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் 48 எம்பி பிரதான கேமரா, 5எம்பி மேக்ரோ சென்சார் மற்றும் 2 எம்பி ஆழ சென்சார் மற்றும் 13எம்பி செல்பி கேமராவினைக் கொண்டுள்ளது.

இது 5000 எம்ஏஎச் பேட்டரி அம்சம் கொண்டுள்ளதாகவும், மேலும் ப்ளூடூத் வி5.0, வைஃபை மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட் போன்றவற்றினை இணைப்பு ஆதரவாகக் கொண்டுள்ளது.

Related posts

அறிமுகமானது ஹானர் எக்ஸ்10 மேக்ஸ் ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

அறிமுகமானது விவோ ஒய் 30 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

2000 வரை விலைக்குறைப்பு செய்யப்பட்ட Vivo Z1 Pro!

TechNews Tamil