மோட்டோரோலா நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் ஒன்றின் ரென்டர்கள் குறித்த விவரங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆனது பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த ஸ்மார்ட்போன் மோட்டோ ஜி ஸ்டைலஸ் என்ற பெயரில் அறிமுகம் ஆகவுள்ளது, இந்த மோட்டோ ஸ்மார்ட்போன் சோஃபியா பிளஸ் XT2043 என்ற மாடல் எண் கொண்டதாக உள்ளது.

மேலும் இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை யு.எஸ்.பி. டைப்-சி போர்ட் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.
மேலும் கேமராவைப் பொறுத்தவரை 48 எம்.பி. பிரைமரி கேமரா அமைப்பினைக் கொண்டதாக உள்ளது. மேலும் இந்த புதிய ஸ்மார்ட்போன் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாக அமைந்துள்ளது.
இந்த புதிய ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் கொண்டு இயங்கும் தன்மை கொண்டதாக உள்ளது. மேலும் டிஸ்பிளே அமைப்பினைப் பொறுத்தவரை பன்ச் ஹோல் வடிவமைப்பினைக் கொண்டுள்ளது.
மேலும் முன்புறத்தில் 25 எம்.பி. செல்ஃபி கேமராவைக் கொண்டுள்ளது.