மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான மோட்டோ நிறுவனம் தற்போது மோட்டோ ஜி ப்யூர் ஸ்மார்ட்போனை அமெரிக்காவில் வெளியிட்டுள்ளது. இந்த மோட்டோ ஜி ப்யூர் ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.
மோட்டோ ஜி ப்யூர் ஸ்மார்ட்போன் இயங்குதளமாக ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம் கொண்டு இயங்குவதாக உள்ளது.
மேலும் இது 6.5 இன்ச் எச்டி ப்ளஸ் 720×1,600 பிக்சல்கள் தீர்மானம், ஐபிஎஸ் டிஎஃப்டி எல்சிடி டிஸ்ப்ளே, 269 பிபிஐ பிக்சல் அடர்த்தி கொண்டுள்ளது.

மோட்டோ ஜி ப்யூர் ஸ்மார்ட்போன் மீடியாடெக் ஹீலியோ ஜி25 எஸ்ஓசி மூலம் இயங்குவதாகவும், 3 ஜிபி ரேம், 512 ஜிபி வரை மெமரி விரிவாக்கக்கூடியதாகவும், மற்றும் 32 ஜிபி வரை உள்சேமிப்பு வசதி கொண்டுள்ளது.
கேமரா அளவாக 13 மெகாபிக்சல் பிரதான கேமரா, 2 மெகாபிக்சல் கேமரா என இரட்டை கேமரா வசதி, 5 மெகாபிக்சல் செல்பி கேமரா கொண்டுள்ளது.
இது 4000 எம்ஏஎச் பேட்டரி, மற்றும் 10 வாட்ஸ் சார்ஜிங் ஆதரவு கொண்டுள்ளது.
இணைப்பு ஆதரவாக 4ஜி எல்டிஇ, வைஃபை, ப்ளூடூத் வி5, யூஎஸ்பி டைப்-சி போர்ட் ஆதரவு கொண்டுள்ளது.