மோட்டோரோலா நிறுவனம் தற்போது புதிய மோட்டோ ஜி பாஸ்ட் ஸ்மார்ட்போனை அமெரிக்காவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.
மோட்டோ ஜி பாஸ்ட் ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் எச்டி பிளஸ் மேக்ஸ் விஷன் டிஸ்பிளேவினையும், மேலும் 1560 x 720 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாக உள்ளது.
மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர் வசதி கொண்டுள்ளது, மெமரி அளவினைப் பொறுத்தவரை இது 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி கொண்டுள்ளது.

கேமராவினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் ஆனது பின்புறத்தில் 16எம்பி பிரைமரி லென்ஸ், 8எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ், 2எம்பி டெப்த் சென்சார் கொண்டுள்ளது.
மேலும் முன்புறத்தில் 8எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் கொண்டு இயங்குவதாய் உள்ளது.
பேட்டரி அளவினைப் பொறுத்தவரை 4000எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது, இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை 4 ஜி எல்டிஇ,வைஃபை, புளூடூத் 5, ஜிபிஎஸ், ஏஜிபிஎஸ், 3.5 மிமீ ஆடியோ ஜாக் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் கொண்டுள்ளது.