மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான மோட்டோ E7 ஸ்மார்ட்போன் செப்டம்பர் 23 ஆம் தேதி அறிமுகம் ஆகவுள்ளது. மோட்டோ E7 ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.
மோட்டோ E7 பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தினைக் கொண்டதாக உள்ளது, மோட்டோ E7 பிளஸ் ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் HD டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது.
மோட்டோ E7 பிளஸ் ஸ்மார்ட்போன் இது வாட்டர் டிராப் நாட்ச் வசதியினைக் கொண்டுள்ளது, மேலும் பிராசசர் வசதியினைப் பொறுத்தவரை ஸ்நாப்டிராகன460 SoC வசதி கொண்டதாக உள்ளது.

மெமரி அளவினைப் பொறுத்தவரை 4ஜிபி ரேம் கொண்டுள்ளது, பேட்டரி அளவினைப் பொறுத்தவரை 5,000mAh கொண்டதாகவும், மேலும் 10W சார்ஜிங் வசதி கொண்டதாகவும் உள்ளது.
கேமராவினைப் பொறுத்தவரை 48 பிக்சலுடன் பிரைமரி கேமரா, 2 மெகா பிக்சலடுன் டெப்த் கேமரா. முன்பக்கத்தில் 8 மெகா பிக்சலுடன் செல்ஃபி கேமரா கொண்டுள்ளது.
மோட்டோ E7 பிளஸ் ஸ்மார்ட்போன் 64ஜிபி மெமரி, எக்ஸ்பேண்டபிள் மெமரி கொண்டுள்ளது, இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை ப்ளூடூத், வைஃபை, ஜிபிஎஸ், 3.5mm ஆடியோ ஜேக், பின்பக்கத்தில் விரல் ரேகை சென்சார் கொண்டுள்ளது.