Mobile

இந்தியாவில் களம் இறங்கியது மோட்டோ இ7 பிளஸ் ஸ்மார்ட்போன்!!

மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான மோட்டோரோலா நிறுவனம் இந்தியாவில் மோட்டோ இ7 பிளஸ் ஸ்மார்ட்போனை வெளியிட்டு உள்ளது. இந்த மோட்டோ இ7 பிளஸ் ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

இந்த ஸ்மார்ட்போன் ஆனது 6.5 இன்ச் ஹெச்டி பிளஸ் மேக்ஸ்விஷன் எல்சிடி ஸ்கிரீன் டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது, மேலும்  ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 460 பிராசஸர் வசதியினைக் கொண்டதாகவும் உள்ளது.

மேலும் இது அட்ரினோ 610 ஜிபியு வசதியினைக் கொண்டுள்ளது, மேலும் மெமரி அளவினைப் பொறுத்தவரை 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

இந்தியாவில் களம் இறங்கியது மோட்டோ இ7 பிளஸ் ஸ்மார்ட்போன்!!

கேமராவினைப் பொறுத்தவரை பின்புறத்தில் 48 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி டெப்த் சென்சார் கொண்டதாகவும், மேலும் முன்புறத்தில் 8 எம்பி செல்ஃபி கேமராவினைக் கொண்டதாகவும் உள்ளது.

பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை கைரேகை சென்சார் கொண்டதாகவும், மேலும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டதாகவு உள்ளது.

இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, மைக்ரோ யுஎஸ்பி கொண்டுள்ளது, மேலும் பேட்டரி அளவினைப் பொறுத்தவரை 5000எம்ஏஹெச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாக உள்ளது.

மோட்டோ இ7 பிளஸ் ஸ்மார்ட்போன் மிஸ்டி புளூ மற்றும் ட்விலைட் ஆரஞ்சு நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 9499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது செப்டம்பர் 30 ஆம் தேதி முதல் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.

Related posts

பிப்ரவரி 11 ஆம் தேதி அறிமுகமாகவுள்ள சியோமி Mi 10 ஸ்மார்ட்போன்

TechNews Tamil

ரியல்மி நிறுவனத்தின் ரியல்மி க்யூ 2ஐ ஸ்மார்ட்போன் அறிமுகம்!!

TechNews Tamil

இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது ஒப்போ நிறுவனத்தின் ஒப்போ ஏ15 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil