Mobile

மலிவான விலையில் அறிமுகமான மோட்டோ E6s!!

மோட்டோரோலா நிறுவனம், மோட்டோ இ தொடரின் கீழ் புதிய Moto E6s என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

மோட்டோ இ6எஸ் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி என்ற அளவுடன் ரூ.7,999க்கு அறிமுகம் செய்துள்ளது. இதன் விற்பனையானது செப்டம்பர் 23 முதல் தொடங்கவுள்ளது..

இரட்டை சிம் (நானோ + மைக்ரோ) ஆதரவு கொண்ட மோட்டோ இ6எஸ், ஸ்டாக் இன்டர்ஃபேஸ் உடனான ஆண்ட்ராய்டு பை கொண்டு இயங்குகிறது,

மலிவான விலையில் அறிமுகமான மோட்டோ E6s!!

இது 6.1 இன்ச் அளவிலான எச்டியுடன், 720 x 1560 பிக்சல்கள் தீர்மானத்துடனான டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. மேலும் இதில் வாட்டர் டிராப் நாட்ச் வடிவமைப்பு, 19.5: 9 என்கிற அளவிலான திரை விகிதம் அடக்கம்.

இது இரட்டை பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. அதில் 13 மெகாபிக்சல் அளவிலான (எஃப் / 2.0,, 1.12 மைக்ரான் பிக்சல், ஆட்டோ-ஃபோகஸ்) முதன்மை சென்சார் + 2 மெகாபிக்சல் அளவிலான டெப்த் சென்சார் போன்றவை உள்ளது.

மேலும் இது 4ஜி எல்டிஇ, ப்ளூடூத் 4.2, வைஃபை 802.11 போன்றவைகளை கொண்டுள்ளது. மேலும் இது ஒரு 3,000 எம்ஏஎச் பேட்டரி கொண்டுள்ளது.

Related posts

அறிமுகமானது அசத்தலான ஹானர் எக்ஸ்10 5ஜி ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

அறிமுகமானது எல்.ஜி. ஜி8எக்ஸ் தின்க் ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

மலேசியாவில் அறிமுகம் ஆகியுள்ளது விவோ வி20 எஸ்இ ஸ்மார்ட்போன்!

TechNews Tamil