Mobile

ஐரோப்பாவில் 5000 எம்ஏஎச் பேட்டரியுடன் மோட்டோ இ32எஸ் ஸ்மார்ட்போன் வெளியீடு!

மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான மோட்டோரோலா நிறுவனம் தற்போது ஐரோப்பாவில் மோட்டோ இ32எஸ் ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது.

மோட்டோ இ32எஸ் ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே, 720×1600 பிக்சல் தீர்மானம், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் கொண்டுள்ளது.

மோட்டோ இ32எஸ் ஸ்மார்ட்போன் மீடியாடெக் ஹீலியோ ஜி37 சிப்செட் வசதி கொண்டுள்ளது.

இயங்குதளமாக ஆண்ட்ராய்டு 12 சார்ந்த MyUX இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது.

ஐரோப்பாவில் 5000 எம்ஏஎச் பேட்டரியுடன் மோட்டோ இ32எஸ் ஸ்மார்ட்போன் வெளியீடு!

மெமரி அளவினைப் பொறுத்தவரை மோட்டோ இ32எஸ் ஸ்மார்ட்போன் 3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரி வசதியுடன் மேலும் கூடுதலாக
மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது.

கேமரா அளவாக மோட்டோ இ32எஸ் பின்புறம் 16எம்பி பிரைமரி கேமரா, 2எம்பி மேக்ரோ சென்சார், 2எம்பி டெப்த் சென்சார் மற்றும் 8எம்பி கேமராவைக் கொண்டுள்ளது.

பேட்டரி அளவினைப் பொறுத்தவரை மோட்டோ இ32எஸ் ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஎச் பேட்டரியுடன் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவாக 4ஜி, டூயல் சிம் ஆதரவு, புளூடூத் 5.0, வைஃபை, ஜிபிஎஸ் கொண்டுள்ளது.

Related posts

6000 எம்.ஏ.ஹெச். பேட்டரியுடன் அசத்தலான இன்பினிக்ஸ் ஹாட் 10 பிளே ஸ்மார்ட்போன் வெளியீடு!

TechNews Tamil

விரைவில் அறிமுகமாகத் தயார் நிலையில் உள்ள சாம்சங் கேலக்ஸி ஏ12 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

டெக்னோ ஸ்பார்க் பவர் ஸ்மார்ட்போன் அறிமுகம்!!

TechNews Tamil