மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ 360 மூன்றாம் தலைமுறை ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
- மூன்றாம் தலைமுறை மோட்டோ 360 ஸ்மார்ட்வாட்ச் விலை – ரூ. 24,800
இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை டிசம்பர் மாதத்தில் துவங்கவுள்ளது.
இந்த வாட்ச் 1.2 இன்ச் வட்ட வடிவம் கொண்ட OLED டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது, மேலும் இது 360×360 பிக்சல் தீர்மானம் கொண்டதாக உள்ளது.

இதில் ஆப் லான்ஸ் ஷார்ட்கட்களை கஸ்டமைஸ் செய்யமுடியும். இது குவால்காம் ஸ்னாப்டிராகன் வியர் 3100 சிப்செட் வசதி கொண்டதாக உள்ளது. இது 1 ஜி.பி. ரேம், 8 ஜி.பி. மெமரியினைக் கொண்டுள்ளது.
இது கூகுளின் வியர் ஒ.எஸ். இயங்குதளம் கொண்டிருக்கிறது. இது ஜி.பி.எஸ். மற்றும் இதய துடிப்பு சென்சார் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.