உலகமே வியக்கும் வண்ணம் சந்திராயன் 2 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது, 48வது நாளில் லாண்டர் சந்திரனின் மேற்பரப்பில் இறங்கும்படியாக இருந்தது.
தரையிறங்க நெருங்கிய நிலையில், உலகமே அதிசயத்து காத்திருந்த அந்த சில மணித் துளிகளில் இந்தியாவிற்கு காத்திருந்த அதிர்ச்சி, இரண்டு கிலோமீட்டர் தூரம் இருக்கும் போது லேண்டர் சிக்னலை இழந்தது.
இஸ்ரோ பல முயற்சிகள் செய்தும் லேண்டருடன் தொடர்பு கொள்ள முடியவில்லை.

தோல்வியில் முடிந்ததா? என சோகத்தில் மூழ்கியிருக்க, நிலவை சுற்றி வரும் ஆர்பிட்டர், லேண்டரை போட்டோவாக எடுத்து அனுப்பியது.
அதன்மூலம் லேண்டரில் எந்த சேதமும் இல்லை, இஸ்ரோ இலக்காக நிர்ணயத்த இடத்தில் விழுந்துள்ளது என்றும் இஸ்ரோ தரப்பு அறிவித்துள்ளது.
லேண்டருடன் தொடர்பினை ஏற்படுத்த முயற்சி செய்து வருகிறது இஸ்ரோ.
அனைத்து பாகங்களும் செயலிழந்து விட்ட நிலையில் அதனை தொடர்பு கொள்வது கடினமான விஷயம் என்று கூறப்பட்டது.
சரியாக லேண்டிங் ஆகியிருந்தால், அனைத்துக் கருவிகளும் முறையாக செயல்பட்டு, இந்தப் பிரச்சினைகள் வந்திருக்காது.
லேண்டர் சற்று சாய்ந்தநிலையில் உள்ளது. சரிசெய்வது சற்று கடினமான விஷயமாக இருந்தாலும், நிச்சயம் சரி செய்வோம் என்று உறுதியளித்துள்ளனர், மேலும் அதற்கான முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.