Apps

மீண்டும் கூகுள் ப்ளே ஸ்டோரில் மித்ரன் செயலி!!

டிக்டாக் செயலியினைப் போன்ற மித்ரன் என்ற செயலி கூகுள் ப்ளே ஸ்டோரில் சமீபத்தில் அறிமுகமாகி அதிக அளவில் டவுண்ட்லோடு செய்யப்பட்டு வந்தது, அதாவது டிக் டாக் போன்றே அனைத்து அம்சங்களையும் கொண்ட இந்த செயலி வெகுவிரைவில் டிக் டாக்கின் இடத்தினைப் பிடித்துவிட்டது.

அதாவது ஒரே மாதத்தில் இந்த மித்ரன் செயலியினை 50 லட்சம்பேர் டவுண்ட்லோடு செய்து பயன்படுத்தி வந்தனர். ஆனால் இந்த வாரத் துவக்கத்தில் இந்த செயலி கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டது.

மீண்டும் கூகுள் ப்ளே ஸ்டோரில் மித்ரன் செயலி!!

அதாவது இந்த மித்ரன் செயலி  இந்தியாவில் தயாரிக்கப்பட்ட செயலி கிடையாது என்றும், பாகிஸ்தான் மென்பொருன் டெவெலப்பரான க்யூபாக்சஸிடமிருந்து வாங்கப்பட்டது எனவும் தகவல்கள் வெளியாகியதை அடுத்து பயனர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது.

மேலும் மிட்ரான் ஆப்பிற்கு எந்தவிதமான தனியுரிமைக் கொள்கையும் இல்லை என்பதாலும்,  மேலும் இந்த செயலி மிகவும் தரமற்றதாக உள்ளதாகக் கருத்தப்படுவதாலும் கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டது என்று கூறப்பட்டது.

மித்ரன் ஸ்பேம் மற்றும் குறைந்தபட்ச செயல்பாடு  கொள்கையை மீறியதாகக் கூறியப்பட்டதை அடுத்து, டெவலப்பருடன் இணைந்து சிக்கல்களைச் சரிசெய்ததை அடுத்து, ப்ளே ஸ்டோரில் மீண்டும் மித்ரன் செயலி பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இதனால் பயனர்கள்  மத்தியில் இது மீண்டும் வரவேற்பினைப் பெற்றுள்ள செயலியாக இருந்து வருகின்றது.

Related posts

வாட்ஸ்ஆப்பில் உள்ள பாதுகாப்பு ஓட்டை குறித்து எச்சரிக்கை!!

TechNews Tamil

அதிரடியான ஆஃபர்களுடன் Flipkart Month-End Mobiles Fest!

TechNews Tamil

நான்கு பேருக்கு மேல் வீடியோ அழைப்பில் சேர அனுமதிக்கும் வாட்ஸ் ஆப்… வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

TechNews Tamil