Apps

டிக் டாக்கிற்கு கடும் சவால்: 1 கோடி டவுண்ட்லோடுகளைக் கடந்துள்ள மித்ரன் செயலி!!

டிக்டாக் செயலியினைப் போன்ற மித்ரன் என்ற செயலி கூகுள் ப்ளே ஸ்டோரில் சமீபத்தில் அறிமுகமாகி அதிக அளவில் டவுண்ட்லோடு செய்யப்பட்டு வந்தது, அதாவது டிக் டாக் போன்றே அனைத்து அம்சங்களையும் கொண்ட இந்த செயலி வெகுவிரைவில் டிக் டாக்கின் இடத்தினைப் பிடித்துவிட்டது.

ஆனால் இந்த மாத துவக்கத்தில் இந்த செயலி கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டது. அதாவது இந்த மித்ரன் செயலி  இந்தியாவில் தயாரிக்கப்பட்ட செயலி கிடையாது என்றும், பாகிஸ்தான் மென்பொருன் டெவெலப்பரான க்யூபாக்சஸிடமிருந்து வாங்கப்பட்டது எனவும் தகவல்கள் வெளியாகியதை அடுத்து பயனர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது.

டிக் டாக்கிற்கு கடும் சவால்: 1 கோடி டவுண்ட்லோடுகளைக் கடந்துள்ள மித்ரன் செயலி!!

மேலும் மிட்ரான் ஆப்பிற்கு எந்தவிதமான தனியுரிமைக் கொள்கையும் இல்லை என்பதாலும்,  மேலும் இந்த செயலி மிகவும் தரமற்றதாக உள்ளதாகக் கருத்தப்படுவதாலும் கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டது.

டெவலப்பருடன் இணைந்து சிக்கல்களைச் சரிசெய்ததை அடுத்து, ப்ளே ஸ்டோரில் மீண்டும் மித்ரன் செயலி பயன்பாட்டிற்கு வந்தது.

பயனர்கள்  மத்தியில் இது மீண்டும் வரவேற்பினைப் பெற்றுள்ள செயலியாக இருந்து வருகின்றது. அதாவது ஒரே மாதத்தில் இந்த மித்ரன் செயலியினை 50 லட்சம்பேர் டவுண்ட்லோடு செய்து இருந்தநிலையில் தற்போது இந்த மித்ரன் ஆப் கூகுள் ப்ளே ஸ்டோரில் 1 கோடி டவுன்லோடுகளை கடந்து விட்டதாக அதன்  தலைமை செயல் அதிகாரி சிவாங்க் அகர்வால் தெரிவித்துள்ளார்.


Related posts

அதிரடியான ஆஃபர்களுடன் Flipkart Month-End Mobiles Fest!

TechNews Tamil

மீண்டும் துவங்கும் அமேசான் Great Indian Festival 2019 விற்பனை!

TechNews Tamil

200 கோடி வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள வாட்ஸ் அப்!!

TechNews Tamil