தற்போது டிக் டாக்கிற்கு மாற்றாக மித்ரன் என்ற செயலி கூகுள் ப்ளே ஸ்டோரில் அதிக அளவில் பதிவிறக்கம் செய்யப்பட்டு வருகின்றது. 2016 ஆம் உலகம் முழுதும் அறிமுகம் செய்யப்பட்ட செயலி டிக் டாக் செயலி அவ்வப்போது அதிக அளவில் சர்ச்சைகளை சந்திக்கும் ஒரு செயலியாகவும் இருந்து வருகின்றது.
இதற்கு இடைக்காலத் தடைவிதிப்பு என்ற ஒன்று பழகிவிட்டது என்று கூட கூறலாம். கூகுள் பிளே ஸ்டோரில் டிக்டாக் செயலிக்கு நான்கு நட்சத்திர குறியீடுகள் வரை வழங்கப்பட்டு வந்தநிலையில் தற்போது மிக மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டதுடன் ஒரு நட்சத்திர குறியீட்டுக்கு மாறியுள்ளது.

அதாவது டிக்டாக் செயலியில் பெண்கள் மீதான ஆசிட் வீச்சு சம்பவம் சரி என்பதுபோல் ஒரு வீடியோ ஒன்று வெளியாக, ப்ளே ஸ்டோரில் டிக்டாக் செயலிக்கு தடை விதிக்கக் கோரி பயனர்கள் பலரும் கூறி வருகின்றனர். பலர் இந்த சம்பவத்திற்குப் பின்னர் தொடர்ந்து அன் இன்ஸ்டால் செய்தும் வருகின்றனர்.
இந்தநிலையில் மித்ரன் என்ற செயலி கூகுள் ப்ளே ஸ்டோரில் அதிக அளவில் டவுண்ட்லோடு செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது, அதாவது டிக் டாக் போன்றே அனைத்து அம்சங்களையும் கொண்ட இந்த செயலி விரைவில் டிக் டாக்கின் இடத்தினைப் பிடித்துவிடும் என்று கூறப்படுகின்றது.