ஜியோவினை பின்னுக்குத் தள்ளி, முன்னிலையில் இருக்க வேண்டும் என்ற நோக்கில், வோடபோன் ஆஃபர்களை வாரி இறைத்து வருகிறது. தற்போது அந்தவகையில் 229 ரூபாய்க்கு ஒரு திட்டத்தை வழங்கி மற்ற நெட்வொர்க்குகளை திணற செய்துள்ளது.
வோடபோன் வழங்கும் இந்தத் திட்டமானது 28 நாட்கள் வேலிடிட்டி மற்றும் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா, போன்றவற்றினை வழங்குகிறது.
ஆனால் இந்தத் திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் பட்சத்தில், ஒரு நாளைக்கு 2 ஜிபி அளவிலான டேட்டா, அன்லிமிடெட் உள்ளூர், எஸ்.டி.டி மற்றும் ரோமிங் அழைப்புகளை பெறலாம். மேலும் இது ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்களையும் வழங்குகிறது.

தற்போது அந்தவகையில் வோடபோன் மீண்டும் முழு டாக் டைம் திட்டத்தை கொண்டு வந்து அசத்தியுள்ளது.
இதற்கு முன்னர் அக்கவுண்டில் குறைந்தது 35 ரூபாயை பராமரிக்க வேண்டியிருந்தது, இல்லையேல் இணைப்பு துண்டிக்கப்படுவதாய் கூறப்பட்டது. இப்போது ரூ .20 ரீசார்ஜ் ரீசார்ஜ் செய்தால் போதும்.
இது வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினைப் பெற்று வருகிறது.