பான் கார்டை ஆதார் அட்டையுடன் இணைப்பதற்கான காலக்கெடுவானது டிசம்பர் 31 ஆம் தேதி என்றும் அடுத்து மார்ச் 31 ஆம் தேதி என்றும் இரண்டு முறை நீட்டிக்கப்பட்டது. இந்த காலக்கெடு தற்போது மீண்டும் நீட்டிக்கப்பட்டு, ஜூன் 30 ஆம் தேதி என்று மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
அதாவது குறித்த காலக் கெடுவுக்குள் ஆதாரை பான் எண்ணுடன் இணைக்கவில்லை என்றால் பான் அட்டையானது செயலற்றதாக அறிவிக்கப்படும் என வருமானத் துறை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
மேலும் செயலற்ற பான் எண்ணை பயன்படுத்துபவர்களுக்கு 10ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் இந்தத் தேதிக்குள் இணைப்பவர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் கட்டணமும் கிடையாது எனவும் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு மிக அதிகமாக உள்ள நிலையில், ஊரடங்கானது மார்ச் 24 ஆம் தேதி துவங்கி ஜூன் 30 வரை பிறப்பிக்கப்பட்டுள்ளது, ஊரடங்கில் சில விஷயங்களுக்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும், முழுவதுமாக இன்னும் இந்தியா இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை.
இந்த நிலையில் மக்கள் யாரும் பான் கார்டினை ஆதார் கார்டுடன் இணைப்பது குறித்து சிந்திக்க மாட்டார்கள், இருப்பினும் ஜூன் 30 ஆம் தேதி கடைசிநாள் என்பதால் பல லட்சக்கணக்கிலான பான் கார்டுகள் செயலிழக்கலாம் என்று கூறப்படுகின்றது.
ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக நிச்சயம் ஆதார் கார்டுடன் பான் கார்டினை இணைப்பதற்கான காலக் கெடுவும் நீட்டிக்கப்படும் என்று தெரிகிறது.