மைக்ரோசாப்ட் நிறுவனம் சர்பேஸ் கோ 2 என்ற லேப்டாப் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்து விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. இந்த சர்பேஸ் கோ 2 மாடலின் விவரங்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.
சர்பேஸ் கோ 2 லேப்டாப் ஆனது 10.5 இன்ச் 1920×1280 பிக்சல் சென்ஸ் டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது, மேலும் இது பாதுகாப்பு வசதியினைப் பொறுத்தவரை கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 வசதியினைக் கொண்டுள்ளது.
பிராசஸர் வசதியினைப் பொறுத்தவரை இன்டெல் பென்டியம் கோல்டு பிராசஸர் 4425Y / 8th Gen இன்டெல் கோர் எம்3 பிராசஸர் கொண்டதாகவும், மேலும் இன்டெல் UHD கிராபிக்ஸ் 615 கொண்டதாகவும் உள்ளது.

மெமரி அளவினைப் பொறுத்தவரை 4 ஜிபி / 8 ஜிபி ரேம், 64 ஜிபி eMMC / 128 ஜிபி எஸ்எஸ்டி போன்றவற்றினைக் கொண்டுள்ளது, மேலும் கேமரா அளவினைப் பொறுத்தவரையில் 8 எம்பி ஆட்டோபோகஸ் கேமரா, 5 எம்பி முன்புற கேமரா போன்றவற்றினைக் கொண்டுள்ளது.
இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரையில் 1 x USB Type-C, 1 x சர்பேஸ் கனெக்ட், சர்பேஸ் டைப் கவர் போர்ட் மற்றும் மைக்ரோSDXC கார்டு ரீடர் வசதியினைக் கொண்டுள்ளது.
மேலும் இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை 3.5 எம்எம் ஹெட்போன் ஜாக், வைபை 6, ப்ளூடூத் 5.0, குவால்காம் ஸ்னாப்டிராகன் எக்ஸ்16 எல்டிஇ மோடெம், 2வாட் ஸ்டீரியோ மற்றும் டால்பி ஆடியோ பிரமீயம் ஸ்பீக்கர், டூயல் மைக்ரோபோன் போன்றவற்றினையும் கொண்டுள்ளது.
மேலும் விண்டோஸ் 10 ஹோம் எஸ் மோட் / விண்டோஸ் 10 ப்ரோ கொண்டு இயங்கும் தன்மை கொண்டதாகவும் உள்ளது.