கொரோனா வைரஸால் இதுவரை உலகம் முழுவதும் 15,02,618 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தற்போது வரை 89,915 பேர் உயிர் இழந்துள்ளனர். கொரோனா வைரஸ் இந்தியா, சீனா, அமெரிக்கா, பிரான்ஸ், ஸ்பெயின், இத்தாலி போன்ற நாடுகளை பெரிய அளவில் பாதிப்படையச் செய்துள்ளது.
கொரோனா தொற்றால் உலகம் முழுவதும் உள்ள பல முக்கிய நிகழ்வுகள் மூன்று மாதங்கள் கழித்து நடைபெறுவதாய் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது, மேலும் பல்வேறு நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

தற்போது நிறுவனத்தின் நிகழ்வுகளை ஒத்தி வைத்தல், ரத்து செய்தல் போன்றவற்றிற்கு மைக்ரோசாஃப்ட் ஒரு தீர்வினைக் கண்டுள்ளது.
அதாவது மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் அனைத்து நிகழ்வுகளும் இனி திட்டமிட்டபடியே நடைபெறும், ஆனால் அவை நேரடியான சந்திப்பாக இல்லாமல் டிஜிட்டல் முறையில் மட்டுமே நடைபெறும். இந்த நடைமுறையானது 2021 ஜூலை வரை அமலில் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பினை மைக்ரோசாஃப்ட் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதேபோல் இதற்கு முன்னர் ஒத்தி வைக்கப்பட்ட நிகழ்வுகள் இன்னும் ஓரிரு வாரத்தில் டிஜிட்டல் முறையில் முதல் கட்டமாக நடைபெறும் என்று அறிவித்துள்ளது.
அதன்படி அடுத்து நடைபெறவுள்ள நிகழ்வுகளின் கால அட்டவணையை மாற்றியமைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.
இந்த அறிவிப்பினைத் தொடர்ந்து பேஸ்புக், கூகுள் போன்ற நிறுவனங்களின் முக்கிய நிகழ்வுகளும் டிஜிட்டல் முறையில் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.