Apps

டிக் டாக் நிறுவனத்தை வாங்கத் திட்டமிட்டுள்ள மைக்ரோசாப்ட் நிறுவனம்!!

சீனப் பொருட்களைப் புறக்கணிப்பது குறித்த கருத்துகள் இந்தியாவில் நிலவி வந்தநிலையில் சீன அரசின் 52 செயலிகளை புறக்கணிக்க வேண்டும் என இந்திய அரசு உத்தரவு பிறப்பித்தது.

அந்தவகையில் இந்தியர்கள் மத்தியில் மிகவும் வரவேற்பினை பெற்ற டிக்டாக் செயலி, ஹலோ ஆப், ஷேர் இட் போன்ற செயலிகளும் தடை செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு செயலிகள் தடைசெய்யப்பட்டதால் டிக் டாக்கின் தாய் நிறுவனமான பைட்டேன்ஸ் ரூ. 45 ஆயிரம் கோடி இழப்பை எதிர்கொண்டுள்ளது.

டிக் டாக் நிறுவனத்தை வாங்கத் திட்டமிட்டுள்ள மைக்ரோசாப்ட் நிறுவனம்!!

மேலும் டிக்டாக் செயலியானது ஆஸ்திரேலியாவிலும் தடைசெய்யப்பட தற்போது டிக் டாக் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது டிக் டாக் நிறுவனத்தின் அமெரிக்க செயல்பாடுகளை மைக்ராசாப்ட் நிறுவனம் வாங்க உள்ளதாகவும் அதுகுறித்த பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

டிரம்ப் டிக் டாக் செயலியினைத் தடை செய்ய நினைத்துள்ள நிலையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் டிக் டாக் நிறுவனத்தினை வாங்குவது குறித்த அறிக்கை ஒன்றினை வெளியிட்டது. அதாவது,  “டிக் டாக் நிறுவனத்தை வாங்குவது குறித்து ஆய்வு செய்து வருகிறோம்” என்று கூறப்பட்டுள்ளது.

Related posts

பிப்ரவரி 1 ஆம் தேதியுடன் இந்த போன்களில் வாட்ஸ் அப்புக்கு தடை!!

TechNews Tamil

கொரோனா பற்றிய தகவல்களுக்காக அறிமுகமாகியுள்ள ஃபேஸ்புக் மெசஞ்சர் சாட்பாட் சேவை!!

TechNews Tamil

கூகுளையே திணறவிட்ட வாட்ஸ்ஆப்பின் புதிய சேவை!

TechNews Tamil