மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான மைக்ரோமேக்ஸ் நிறுவனம் 52 மைக்ரோமேக்ஸ் இன் 2பி ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த மைக்ரோமேக்ஸ் இன் 2பி ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.
மைக்ரோமேக்ஸ் இன் 2பி ஸ்மார்ட்போன் 6.52 இன்ச் 1600×720 பிக்சல் HD+ 20:9 டிஸ்ப்ளேவினைக் கொண்டதாகவும், ஆக்டாகோர் UNISOC T610 பிராசஸர் வசதியினைக் கொண்டதாகவும் உள்ளது.

மேலும் மெமரி என்று கொண்டால் 4 ஜிபி / 6 ஜிபி LPDDR4x ரேம், 64 ஜிபி eMMC 5.1 மெமரி மற்றும் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியினைக் கொண்டுள்ளது.
இயங்குதளத்தினைப் பொறுத்தவரை ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தினைக் கொண்டுள்ளது.
கேமராவினைப் பொருத்தவரை 13 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி டெப்த் சென்சார், 5 எம்பி செல்பி கேமராவினைக் கொண்டுள்ளது.
மேலும் பின்புறம் கைரேகை சென்சார், பேஸ் அன்லாக் கொண்டுள்ளது. ஆடியோ வசதியினைப் பொறுத்தவரை 3.5mm ஆடியோ ஜாக், எப்எம் ரேடியோ கொண்டுள்ளது.
இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.0 மற்றும் யு.எஸ்.பி. டைப் சி கொண்டுள்ளது.
பேட்டரி அளவினைப் பொறுத்தவரை 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் 10 வாட் சார்ஜிங் வசதியினைக் கொண்டுள்ளது.