Mobile

தென் கொரியாவில் களம் இறங்கியது மைக்ரோமேக்ஸ் இன் 1பி ஸ்மார்ட்போன்!!

மைக்ரோமேக்ஸ் நிறுவனம் தென் கொரியாவில் இன் பிராண்டு 1பி என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த மைக்ரோமேக்ஸ் இன் ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

மைக்ரோமேக்ஸ் இன் 1பி ஸ்மார்ட்போன் ஆனது 6.52 இன்ச் 1600×720 பிக்செல் ஹெச்டி பிளஸ் 20:9 மினி டிராப் டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது, மேலும் இது 2.3GHz ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி35 பிராசஸர் வசதியினைக் கொண்டுள்ளது.

மேலும் இது IMG PowerVR GE8320 GPU, 2ஜிபி LPDDR4x ரேம் / 32ஜிபி  மெமரி மற்றும் 4ஜிபி LPDDR4x ரேம் / 64ஜிபி மெமரி போன்றவற்றுடன்  மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியினைக் கொண்டுள்ளது.

மேலும் இயங்குதளத்தினைப் பொறுத்தவரை ஆண்ட்ராய்டு 10 கொண்டுள்ளதாகவும், கேமராவினைப் பொறுத்தவரை 13 எம்பி பிரைமரி, f/1.8, LED பிளாஷ், 2 எம்பி டெப்த் சென்சார், 8 எம்பி செல்மபி கேமரா மேலும் பின்புறத்தில் கைரேகை சென்சார் கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எப்எம் ரேடியோ, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, யுஎஸ்பி டைப் சி கொண்டதாக உள்ளது.

பேட்டரி அளவினைப் பொறுத்தவரை 5000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டதாகவும் மேலும் 10வாட் சார்ஜிங்  கொண்டுள்ளது.

மைக்ரோமேக்ஸ் இன் 1பி ஸ்மார்ட்போன் பர்ப்பிள், புளூ மற்றும் கிரீன் போன்ற வண்ணங்களில் வெளியாகியுள்ளது.

Related posts

அறிமுகமானது ப்ளேஸிங் ப்ளூ வண்ணத்தில் ஒப்போ எப்15 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

ரூ. 9999 க்கு அசத்தலான அம்சங்களுடன் அறிமுகமான Tecno Camon 12 Air!

TechNews Tamil

நேற்று விற்பனையைத் துவக்கியுள்ள Realme 5s!

TechNews Tamil