Mobile

இந்தியாவில் அறிமுகமானது மைக்ரோமேக்ஸ் இன் நோட் 1 ஸ்மார்ட்போன்!!

மைக்ரோமேக்ஸ் நிறுவனம் இந்தியாவில் மைக்ரோமேக்ஸ் இன் நோட் 1 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த மைக்ரோமேக்ஸ் இன் நோட் 1 ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

மைக்ரோமேக்ஸ் இன் நோட் 1 ஸ்மார்ட்போன் ஆனது 6.67 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது.

மேலும் பிராசஸர் வசதியினைப் பொறுத்தவரை ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி85 பிராசஸர் கொண்டதாகவும், மேலும் மெமரி அளவினைப் பொறுத்தவரை 4 ஜிபி LPPDDR4x ரேம், 64 ஜிபி / 128 ஜிபி மெமரி மற்றும் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியினைக் கொண்டுள்ளது.

இந்தியாவில் அறிமுகமானது மைக்ரோமேக்ஸ் இன் நோட் 1 ஸ்மார்ட்போன்!!

இயங்குதளத்தினைப் பொறுத்தவரை ஆண்ட்ராய்டு 10 கொண்டுள்ளதாகவும், மேலும் கேமராவினைப் பொறுத்தவரை 48 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்பி மேக்ரோ லென்ஸ், 2 எம்பி டெப்த் சென்சார், 16 எம்பி செல்பி கேமரா கொண்டுள்ளது.

பின்புறத்தில் கைரேகை சென்சார் கொண்டதாகவும், மேலும் இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை 3.5 எம்எம் ஆடியோ ஜாக், டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, யுஎஸ்பி டைப் சி கொண்டுள்ளது.

பேட்டரி அளவினைப் பொறுத்தவரை 5000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டதாகவும், மேலும் 10வாட் சார்ஜிங் கொண்டதாகவும் உள்ளது. 

மைக்ரோமேக்ஸ் இன் நோட் 1 ஸ்மார்ட்போன் கிரீன் மற்றும் வைட் போன்ற வண்ணங்களில் வெளியாகி உள்ளது.

Related posts

விரைவில் அறிமுகமாகவுள்ள ரெட்மி 8ஏ ஸ்மார்ட்போன்.!

TechNews Tamil

சிறந்த தொழில்நுட்பத்துடன் எல்ஜி ஜி8எஸ் திங்க் ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

TechNews Tamil

அசரவைக்கும் அம்சங்களுடன் வெளியானது விவோ Z6 5ஜி ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil