மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான மைக்ரோமேக்ஸ் நிறுவனம் மைக்ரோமேக்ஸ் இன் 1 பி ஸ்மார்ட்போனை டிசம்பர் 10 ஆம் தேதி அறிமுகம் செய்யவுள்ளது. இந்த மைக்ரோமேக்ஸ் இன் 1 பி ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களைப் பார்க்கலாம்.
மைக்ரோமேக்ஸ் இன் 1 பி ஸ்மார்ட்போன் ஆனது பச்சை, நீலம் மற்றும் ஊதா போன்ற வண்ணங்களில் வெளியாகியுள்ளது.
இந்த மைக்ரோமேக்ஸ் இன் 1 பி ஸ்மார்ட்போன் ஆனது 6.52 இன்ச் எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளேவினைக் கொண்டதாகவும் உள்ளது, மேலும் மெமரி அளவினைப் பொறுத்தவரை 2 ஜிபி ரேம் மற்றும் 4 ஜிபி ரேம் போன்ற வகைகளில் வெளியாகியுள்ளது.

மேலும் மைக்ரோமேக்ஸ் இன் 1 பி ஸ்மார்ட்போன் 64 ஜிபி உள்சேமிப்பு வசதியினைக் கொண்டுள்ளது. மேலும் கேமராவினைப் பொறுத்தவரை 13 எம்பி முதன்மை கேமரா, 2 எம்பி இரண்டாம் நிலை கேமரா மற்றும் முன்பக்கத்தில் 8 எம்பி செல்பி கேமராவினைக் கொண்டுள்ளது.
பேட்டரி அளவினைப் பொறுத்தவரை 5000 எம்ஏஎச் பேட்டரி கொண்டதாகவும், மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 10 வாட்ஸ் வேக சார்ஜிங் வசதியினைக் கொண்டுள்ளது.
இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரையில் 4ஜி வோல்ட்இ, யூஎஸ்பி டைப்சி போர்ட் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.