செப்டம்பர் 17 ஆம் தேதி Mi TV அறிமுகம் செய்யப்படும் என்று சியோமியின் சார்பில் அதிகாரப்பூர்வத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சியோமி நிறுவனத்தின் ஸ்மார்ட் லிவிங் நிகழ்ச்சியானது செப்டம்பர் 17 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியின்போது சியோமியின் புதிய மி டிவி அறிமுகமாகும் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.

செப்டம்பர் 17 ஆம் தேதி அறிமுகமாகும் சியோமி 65 இன்ச் மி டிவியை
அறிமுகப்படுத்தும். அதன் விலை ரூ.40,000 அல்லது ரூ.50,000 ஆகும்.
மேலும் சியோமியின்
ஸ்மார்ட் லிவிங் நிகழ்ச்சியில், சியோமி மி வாக்யூம் கிளீனர், மி டோர் பெல், மி பேண்ட் 4 போன்ற சாதனங்கள் வெளியாகும்
என்றும் தெரிகிறது.
ஆனால் இவையும் இன்னும் அதிகாரப்பூர்வமாக
உறுதிப்படுத்தப்படவில்லை, எவை இந்த
சேலில் இடம்பெறும் என்று மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துவருகிறது.
பலரும் இதுகுறித்த எதிர்பார்ப்பினை எதிர்நோக்கி காத்துக் கொண்டுள்ளனர், இதுகுறித்த தகவல்களை சியோமி விரைவில் உறுதிப்படுத்தி வெளியிட்டால் நன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.