Gadgets

சியோமி நிறுவனம் வெளியிட்டுள்ள மி QLED ஸ்மார்ட் டிவி!

மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான சியோமி நிறுவனம் தற்போது புதிய Mi QLED 4கே ஸ்மார்ட் டிவியினை இந்தியாவில் வெளியிட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் டிவி குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

சியோமி மி QLED ஸ்மார்ட் டிவியானது 55 இன்ச் Mi QLED 4K டிவியினையும் மற்றும் Ultra-HD QLED டிஸ்பிளேவினைக் கொண்டதாகவும் உள்ளது.

மேலும் இது 3840 x 2160 பிக்சல் தீர்மானம் கொண்டதாகவும் மேலும் எச்டிஆர்10, எச்டிஆர்10+, HLG, டால்பி விஷன் போன்ற ஆதரவுகளினைக் கொண்டுள்ளது.

சியோமி நிறுவனம் வெளியிட்டுள்ள மி QLED ஸ்மார்ட் டிவி!

மேலும் இந்த ஸ்மார்ட் டிவி இயங்குதளத்தினைப் பொறுத்தவரை ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் தன்மை கொண்டுள்ளது.

மேலும் இது 55 இன்ச் அளவினைக் கொண்டதாகவும், மேலும் பிராசசர் வசதியினைப் பொறுத்தவரை மீடியாடெக் எம்டி9611 குவாட்-கோர் பிராசஸர் வசதியினைக் கொண்டுள்ளது.

மேலும் மெமரி அளவினைப் பொறுத்தவரை 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி வசதியை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் தன்மை கொண்டுள்ளது.

மேலும் இந்த சியோமி டிவியானது 30W ஆறு ஸ்பீக்கர்கள் ஆதரவினைக் கொண்டதாகவும், மேலும் இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை 3 எச்டிஎம்ஐ 2.1 போர்ட், 2 யுஎஸ்பி போர்ட், 60Hz of refresh rate, புளூடூத் 5.0 போன்றவற்றினையும் கொண்டுள்ளது.

Related posts

ரூ. 22,995 க்கு அறிமுகமான ஃபாஸில் ஜென் 5 ஸ்மார்ட்வாட்ச்!!

TechNews Tamil

சீனாவில் களமிறங்கியது ஏர் பட்ஸ் ட்ரூ வயர்லெஸ் இயர்போன்!!

TechNews Tamil

இந்தியாவில் முதன்முறையாக போல்ட் இயர்போன் அறிமுகம்.!

TechNews Tamil