சியோமி நிறுவனம் தனது கான்செப்ட் போன் ஆன மி மிக்ஸ் ஆல்பா ஸ்மார்ட்போனுடன் சேர்த்து மி பவர் பேங்க் 3 யையும் அறிமுகம் செய்தது.
இந்த பவர் பேங்க் 50W ஃபாஸ்ட் சார்ஜிங்கை கொண்டதாக உள்ளது, இது 20000 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரியை சேமிக்கக் கூடியதாக உள்ளது.
இதன் விலை ரூ.3,000 ஆகும், இதன் விற்பனை தேதி குறித்த விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. பலரும் இதன் விற்பனையை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர்.

மேலும் இது சூப்பர்
ஃபிளாஷ் சார்ஜிங்கை கொண்டுள்ளது. இது இரண்டு யூ.எஸ்.பி டைப்-ஏ போர்ட்கள் மற்றும் ஒரு யூ.எஸ்.பி
டைப்-சி போர்ட்டை கொண்டுள்ளது. இந்த பவர் பேங்கின் மூலம்
ஒரே நேரத்தில் 3 ஸ்மார்ட்போன்களை சார்ஜ் செய்ய
முடியும்.
இந்தியாவில் விற்பனைக்கு வரும்போது, இதன் விலையில் மாற்றம் இருக்கலாம் என்று தெரிகிறது. இதன் விற்பனை தீபாவளி சேலின்போது சலுகைகளுடன் விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது.