வங்கி சேவை என்ற ஒன்றே தற்போது இல்லாதநிலை ஆகிவிட்டது. அந்த அளவில் பணப்பரிவர்த்தனைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
மொபைல் பேங்கிக், நெட் பேங்கிக் என்பதைத் தாண்டி தற்போது, பணப்பரிவர்த்தனைக்காக வாடிக்கையாளர்கள் பல வகையான ஆப்களை பயன்படுத்த துவங்கிவிட்டனர்.

கூகுள் பே, பேடிஎம், அமேசான் பே, வாட்ஸ்அப் பே என ஒவ்வொரு நிறுவனமும் பணவர்த்தனையினை ஒரு தொழிலாக கையில் எடுத்து அதிக அளவிலான சேவைகள் செய்து வருகின்றன.
தற்போது மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான ஜியோமி பணவர்த்தனை ஆப் ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஜியோமியின் ‘Mi Pay App’ என்பதே இதன் பெயராகும். இந்த மி பே செயலி இதுவரை மி ஸ்டோரில் மட்டுமே இருந்தது, அதிக அளவில் பயனர்களைப் பெற வேண்டும் என்ற நோக்கில் இது தற்போது கூகுள் ப்ளே ஸ்டோரில் களம் இறக்கப்பட்டுள்ளது.
ஜியோமி நிறுவனம் அறிமுகப்படுத்திய இந்த மி பே ஆப் பெரிய அளவிலான வரவேற்பினைப் பெறும் என்று தெரிகிறது.
இது தற்போது பயனர்கள் மத்தியில் பெரிய அளவிலான வரவேற்பினைப் பெற்று வருகிறது.