சியோமி நிறுவனத்தின் Mi நோட் 10 ஸ்மார்ட்போன் சமீபத்தில் ஸ்பெயினில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இந்த ஸ்மார்ட்போன் ஆனது Mi சிசி9 ப்ரோ என்ற பெயரில் சீனாவில் அறிமுகமாகி உள்ளது.
இந்த Mi நோட் 10 ஸ்மார்ட்போன் கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி வெளியாக உள்ளது.
மி நோட் 10 ஸ்மார்ட்போன் ஆனது வாட்டர் டிராப் நாட்ச் ஓஎல்இடி டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது மேலும் வளைந்த விளிம்புகளை வெளிப்புறத்தில் கொண்டதாகவும் உள்ளது.

மேலும் இது இன்-டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனரைக் கொண்டுள்ளது. மேலும் இது ஸ்னாப்டிராகன் 730 ஜி ப்ராசஸர் கொண்டு இயங்கக் கூடியதாக உள்ளது, 6 ஜிபி ரேம், 5,260 எம்ஏஎச் பேட்டரி போன்ற அம்சங்களையும் கொண்டுள்ளது.
இவை 6.47 இன்ச் அளவிலான கர்வ்டு முழு-எச்டி உடன் 1080×2340 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட OLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது.
மேலும் இது ஆக்டா கோர் க்வால்காம் ஸ்னாப்டிராகன் 730 ஜி SoC ப்ராசஸர் கொண்டு இயங்கக்கூடியதாக உள்ளது.
20 மெகாபிக்சல் வைட்-ஆங்கிள்
கேமரா, 12 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ லென்ஸ், 5 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ லென்ஸ், 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா போன்றவற்றையும் கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 32 மெகாபிக்சல் செல்பீ கேமரா போன்றவையும் உள்ளது.